கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆரல்வாய்மொழி அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் நேற்று ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலின் முன்பு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. சந்தேகப்படும் வகையில் நின்ற அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
13 டன் ரேஷன் அரிசி
அப்போது, லாரியில் 200-க்கும் மேற்பட்ட மூடைகளில் மொத்தம் 13 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. லாரி டிரைவர் யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அரிசி மூடைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story