கோடை வெப்பத்தை தணிக்க விற்பனைக்கு வந்த தர்பூசணி


கோடை வெப்பத்தை தணிக்க விற்பனைக்கு வந்த தர்பூசணி
x
தினத்தந்தி 7 March 2022 4:09 PM IST (Updated: 7 March 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெப்பத்தை தணிக்க விற்பனைக்கு வந்த தர்பூசணி

தமிழகமெங்கும் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தைத் தணிக்க குளிர்பானம் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, பழரசம் போன்றவற்றை மக்கள் உட்கொள்வார்கள். இதில் நீர்ப்பழம் என்கின்ற தர்பூசணி தாகத்தை தணிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது. அந்தவகையில் பல்லடம் பகுதியில் தற்போது தர்பூசணி விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 
இது குறித்து பல்லடத்தைச் சேர்ந்த தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறுகையில், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் விளைந்த தர்பூசணியை விற்பனைக்கு கொண்டு வருகிறோம். அதிக மழையால் தர்பூசணி விளைச்சல் குறைந்து போனது. இதனால் தர்பூசணி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.15க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் மக்கள் தர்பூசணியை ஆர்வமுடன் வாங்கி உண்டு வருகின்றனர் என்றார். 

Next Story