திருவொற்றியூரில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது


திருவொற்றியூரில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
x
தினத்தந்தி 7 March 2022 4:17 PM IST (Updated: 7 March 2022 4:19 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ‘மெத் ஐஸ்’ என்ற போதை பொருள் விற்பதாக வடசென்னை இணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ‘மெத் ஐஸ்’ போதை பொருள் விற்ற புது வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26), ராயபுரத்தைச் சேர்ந்த காதர் மொய்தீன் (28), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த நாகூர் அனிபா (39), பெரம்பூர் தில்லை நகரை சேர்ந்த ஷேக் முகமது (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான மணிகண்டனின் தந்தை சரவணன், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story