மாடுகளை பராமரிப்பது எப்படி
மாடுகளை பராமரிப்பது எப்படி
மடத்துக்குளம் தாலுகா பகுதியில் பசுமாடு வளர்ப்பது முக்கிய தொழிலாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மடத்துக்குளம் கிராம பகுதியிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கால்நடைகளை ஆரோக்கியமான வளர்த்தால் மட்டுமே பால் உற்பத்தியில் லாபம் ஈட்ட முடியும். கோடைகாலத்தில் மாடுகள் பராமரிப்பது குறித்து கால்நடை வளர்ப்பவர்கள் கூறியதாவது
மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிக வெப்பத்தால் கால்நடைகளுக்கு சிரமங்கள் ஏற்படும். இதை தவிர்க்க மாட்டு தொழுவம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தெளித்து ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். எருக்குழி அருகில் இருந்தால் மருந்துகள் தெளிப்பதன் வாயிலாக ஈக்கள் உற்பத்தியை குறைக்க முடியும். பசுந்தீவனத்தை தவறாமல் கொடுக்கும்போது பால் உற்பத்தி பாதிக்காமல் தடுக்கலாம். காய்ந்த புல் மற்றும் வைக்கோல் ஆகியவற்றோடு அடர்தீவனங்களை யும் கறவை மாடுகளுக்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை குடிநீர் கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ஒவ்வொரு மாட்டிற்கும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.கறவை மாடுகளின் குடிநீர்த் தேவையை உடனடியாக நிறைவு செய்ய வேண்டியது மிகஅவசியம். வெப்பம் அதிகமாக இருக்கும் போதுமேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. வெயில் அதிகமாக உள்ள போது மர நிழலில் அல்லது ஆறு, வாய்கால் அருகிலுள்ள குளிர்ச்சியான இடத்தில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
--
Related Tags :
Next Story