பெண் விஷம் குடித்து தற்கொலை
குலசேகரன்பட்டினம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள வேதகோட்டைவிளை ராமசாமி புரத்தை சேர்ந்த வெற்றிவேல் மகன் சித்திரைலிங்கம் (வயது 48). டிரைவர். இவரது மனைவி ஜெயசித்ரா (37).இருவருக்கும் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெய சித்ராவுக்கு அடிக்கடி வயிற்றுவலியால் அவதப்பட்டு வந்தாராம். இதற்கு உடன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். வலி குறையாததால் கடந்த சில நாட்களாக ஜெயசித்ரா மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி சித்திரை லிங்கம் வீட்டில் இருந்து வேலை விஷயமாக வெளியே சென்று விட்டாராம். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயசித்ரா சாணி பவுடரை கலக்கி குடித்து விட்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த சித்திரைலிங்கம், ஜெயசித்ராவை உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story