மந்திரி நவாப் மாலிக் சிறையில் அடைப்பு
தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய வழக்கில் மந்திரி நவாப் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை,
தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய வழக்கில் மந்திரி நவாப் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டார்.
மந்திரி அதிரடி கைது
மரட்டியத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியுமான நவாப் மாலிக் கடந்த மாதம் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் இருந்து முறைகேடாக சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. அவர் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார்.
விசாரணை காலம் முடிந்ததை அடுத்து நேற்று அமலாக்கத்துறை அவரை மும்பை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஆர்.என். ரோகடே முன் ஆஜர்படுத்தியது.
நீதிமன்ற காவல்
அப்போது நீதிபதி நவாப் மாலிக்கை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ளபோதிலும், மந்திரி நவாப் மாலிக் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
--------------
Related Tags :
Next Story