அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 7 March 2022 7:09 PM IST (Updated: 7 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

குன்னூர்

குன்னூர் அருகே பேரக்ஸ் கூர்க்காகேம்ப் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா, கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

5-ந் தேதி கோவில் வளாகத்தில் உள்ள முனீஸ்வரன், கணபதி, நாகேந்திரசாமி, கன்னிமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, உச்சி பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story