நடுரோட்டில் பழுதாகி நின்ற சரக்கு லாரி


நடுரோட்டில் பழுதாகி நின்ற சரக்கு லாரி
x
தினத்தந்தி 7 March 2022 7:30 PM IST (Updated: 7 March 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

நாடுகாணி சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்

நாடுகாணி சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி பழுதானது

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோன்று கேரளாவில் இருந்தும் கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சரக்கு லாரிகள் இயக்கப்படுகிறது. இதனால் 3 மாநிலங்களையும் இணைக்கக்கூடிய பகுதியாக கூடலூர் உள்ளது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு கேரளாவில் இருந்து மைசூரு செல்ல கூடலூர் வழியாக பிளைவுட் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வந்தது. நாடுகாணி நுழைவு சோதனைச்சாவடி அருகே வந்தபோது நடுரோட்டில் திடீரென லாரி பழுதடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சிறிய ரக வாகனங்கள்

இதை அறிந்த தேவாலா போலீசார் மற்றும் டிரைவர்கள் பழுதடைந்த லாரியை சாலையோரம் நிறுத்தி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கல்லை. இதனால் சிறிய ரக வாகனங்கள் மட்டும் ஒருபுறமாக செல்ல அனுமதிக்கப்பட்டது. 

கனரக வாகனங்களை இயக்க முடியவில்லை.பின்னர் மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, அதில் பிளைவுட் மாற்றப்பட்டது. தொடர்ந்து பழுதடைந்த லாரி சாலையோரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.


Next Story