ஊத்துப்பட்டி கிராமத்தில் சமூக நல்லிணக்க பொதுமக்கள் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ஊத்துப்பட்டி கிராமத்தில் சமூக நல்லிணக்க பொதுமக்கள் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
சின்னமனூர்:
சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 700 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சமூக நல்லிணக்க பொதுமக்கள் கமிட்டி சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், சின்னமனூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி மற்றும் பொது மக்களின் ஜனநாயக ஆதரவை புறந்தள்ளி குதிரை பேரம் நடத்தப்பட்டு உள்ளது. சாதி,மத வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரில் பிரிவினையை தூண்டும் வகையிலும், நயவஞ்சகமான செயலிலும் சிலர் ஈடுபட்டு உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு எப்போதும் போல் அனைத்து மக்களும் சகோதர உணர்வோடு வாழ வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story