கீழ் மயிலத்தில் மயிலியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்


கீழ் மயிலத்தில் மயிலியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
x
தினத்தந்தி 7 March 2022 2:39 PM GMT (Updated: 7 March 2022 2:39 PM GMT)

கீழ் மயிலத்தில் மயிலியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

மயிலம்

மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ் மயிலத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த  மயிலியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 28-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத்தில் ஆட்டுகிடா, சிம்ம வாகனம், யானை, முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து திருகல்யாணமும், இரவு அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. 

மேலும் விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மயிலியம்மன் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில் விரதம் இருந்த பக்தர்கள் பாலசித்தர் அத்தி தீர்த்த குளக்கரை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் சன்னதி வீதி, பஸ் நிறுத்தம், புதுவை சாலை, பாளையம் வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து சப்த்த கன்னிகளுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் மயிலியம்மன் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Next Story