தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று(திங்கட்கிழமை) மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.
குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் காந்தி மள்ளர் தலைமையில் கட்சியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வரும் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்து உள்ளார். ஆகையால் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story