தனியார் தொழிற்சாலை பஸ் மோதி திருத்தணி போலீஸ் ஏட்டு பலி
அரக்கோணம் அருகே திருத்தணி சாலையில் தனியார் தொழிற்சாலை பஸ் மோதி திருத்தணி போலீஸ் ஏட்டு பலியானார்.
விபத்தில் பலி
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு உரிமையான பஸ் திருத்தணி பகுதியில் பணியாளர்களை ஏற்றி கொண்டு சென்றது. அரக்கோணம் அருகே திருத்தணி சாலையில் ஜோதிநகர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அரக்கோணத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் ஏட்டு
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் விரைந்து வந்து, அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் தொழிற்சாலை பஸ்சை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் பலியான செந்தில்குமார் திருத்தணி போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணமாகி சுஜாதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story