சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் கமிஷனர் பிரதீப்குமார் தகவல்


சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் கமிஷனர் பிரதீப்குமார் தகவல்
x
தினத்தந்தி 7 March 2022 9:42 PM IST (Updated: 7 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளதாக கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.

கோவை

சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றதில் கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளதாக கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

போலீசார் ரோந்து 

கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 24 ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் ரோந்து சுற்றி வருகின்றன. ஒரு சம்பவம் நடைபெற்றால் அவசர எண்ணான 100-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பார்கள். 

அந்த தகவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அருகே ரோந்து செல்லும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்படும். உடனே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வார்கள். 

மாநில அளவில் முதலிடம்

போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் ரோந்து வாகனம் எத்தனை நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு சென்று சேர்ந்தது என்று பதிவு செய்யப்படுகிறது. 

அதன்படி 2 நிமிடம் 59 வினாடிகளில் ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோவை மாநகர போலீஸ் மாநில அளவில் முதலிடத்தை பெற்று உள்ளது. 

3 நிமிடம் 12 வினாடிகளில் சென்று கரூர் போலீஸ் 2-வது இடத்தை யும், 3 நிமிடம் 17 வினாடிகளில் சென்று தூத்துக்குடி மாநகர போலீஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது. முதலிடம் பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

ஜி.பி.எஸ். கருவி

அனைத்து ரோந்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 2 மாதங்களாக விபத்து உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. 

இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்கு வரத்து நெரிசல் உள்ளது. 

திருச்சிரோடு சுங்கம், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் பகுதிகளில் மேம்பால பணிகள் முடிவடைந்து உள்ளதால் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story