விழுப்புரம் கீழ் பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழுப்புரம் கீழ் பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 March 2022 9:43 PM IST (Updated: 7 March 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கீழ் பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 9.30 மணியளவில் கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட கொடிமரத்திற்கு கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து ஊரல்கரையில் இருந்து கரகம் ஜோடித்து வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர் பகல் 12.15 மணியளவில் பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கீழ்பெரும்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story