காவல் துறையில் பெண்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்க சிறப்பு குழு
காவல் துறையில் பெண்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
காரைக்கால், மார்ச்.
காவல் துறையில் பெண்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
மகளிர் தின விழா
காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், உலக மகளிர் தின விழா முதல் முறையாக நேற்று கொண்டாடப்பட்டது. காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமை தாங்கினார்.
அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவால் ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மரிகிறிஸ்டியன்பால், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குனர் சத்யா, மருத்துவ அதிகாரி டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா பேசியதாவது:-
சிறப்பு குழு
தற்போது காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் சில இடைவெளி உள்ளது. அதை நீக்கும் வகையில் இங்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது பாராட்டுக்குரியது. இது ஆண்டுதோறும் நடத்தப்படவேண்டும். பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நேரடியாக காவல் துறையை தொடர்பு கொள்ள தயக்கம் இருக்கிறது. இது சம்பந்தமாக முதல்-அமைச்சரிடம் பேசி, காரைக்காலில் ஒரு சிறப்பு குழுவை அமைத்து, அந்த குழு மூலம் பெண்கள் தங்கள் பிரச்சினையை காவல் துறையில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் புகார் தெரிவிப்பதில் பெண்களுக்கு சிரமம் இருக்காது.
புதுச்சேரியில் பெண்களுக்கென்று தனித்தனி அமைப்புகள் நிறைய உள்ளது. இதுபோன்ற அமைப்புகளை காரைக்காலிலும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story