‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 March 2022 9:48 PM IST (Updated: 7 March 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்திக்கு நன்றி
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை ஊராட்சியில் கோம்பையன்பட்டிக்கு செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் செடிகள் படர்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக தினத்தந்தியின் புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்த செடிகளை அகற்றினர். இதற்காக தினத்தந்தி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
-ஆரோக்கியசாமி, கோம்பையன்பட்டி.
நிரம்பி வழியும் குப்பை
தேனி மாவட்டம் சருத்துப்பட்டி இந்திரா காலனியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் குப்பை தொட்டி நிரம்பி குப்பைகள் வெளியே கிடக்கின்றன. அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், சருத்துப்பட்டி.
ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்
திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியில் ஆற்றில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஆறு குப்பை கூழமாக மாறி பாழாகி வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், முள்ளிப்பாடி.
சேதமடைந்த சாலை
பழனி அருகே உள்ள தும்மலப்பட்டியில் இருந்து மரிச்சிலம்பு கிராமத்துக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-அறிவாசான், மானூர்.

Next Story