அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவையொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.
மேலும் 17-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்துசக்திவேல் புறப்பாடும், 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திரம் அன்று புஷ்பரத ஊர்வலமும், 19-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முத்துப் பல்லக்கில் சாமி வீதி உலாவும், 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெப்பல் உற்சவமும், 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடும்பன் பூஜையுடன் விழா முடிவடைகிறது.
விழாவையொட்டி தேச மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு, திருவருட்பா இசை நிகழ்ச்சி, சென்னை ராமலிங்கம் தலைமையில் வழக்காடு மன்றம், நடிகை கஸ்தூரி தலைமையில் பட்டிமன்றம், பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோரின் இன்னிசைக்கச்சேரி கரகாட்டம், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story