வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலியாகினர்.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள கருங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு பாளையத்தை அடுத்த வரகரம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று முத்தம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கொடைரோடு அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துக்காளை (70). இவர், நேற்று முன்தினம் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் ெகாழிஞ்சிப்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அருகே தாளையூத்து பகுதியில் சாலையை கடக்க முயன்ற 60 வயது மூதாட்டி மீது பழனி-உடுமலை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story