அறுவடைக்கு தயாரான 400 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன
கீழ்வேளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான 400 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான 400 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரவலாக மழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்தன.
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளான கிள்ளுக்குடி, 105 மணலூர், செண்பகபுரம், கடலாக்குடி, கூரத்தாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் 10 நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 400 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்்து வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களுக்கு உரம், பூச்சி மருந்்து தெளித்து பாதுகாத்தோம்.
பெரும் நஷ்டம் ஏற்படும்
பயிர்கள் நான்கு வளர்ந்து வந்தபோது கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தாளடி பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது கடந்த 3 நாட்கள் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story