வீடு புகுந்து திருடிய சகோதரர்கள் கைது
வீடு புகுந்து திருடிய சகோதரர்கள் கைது
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு வயது 38. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. கடந்த மாதம் 27ந் தேதி வீட்டைபூட்டு விட்டு குடும்பத்துடன் பிரபு சென்னை சென்றார். பின்னர் கடந்த 4ந் தேதி வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த, தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பல்லடம் அருகே உள்ள முத்தாண்டிபாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேனில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் 32, அவரது தம்பி மாதவன்29, என்பதும், இருவரும் சேர்ந்து பருவாய் பிரபு வீட்டில் 5 பவுன் நகையும், கடந்த ஜனவரி மாதம் 20ந் தேதி அவினாசிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நிதிஷ் கிருஷ்ணன் வீட்டில் 12 பவுன் நகை திருடி சென்றதும் தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த வேன் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகளும், மாதவன் மீது 10 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். திருடர்களை பிடித்த காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குழந்தைவேலு, உள்ளிட்ட தனிப்படை போலீசாரை, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story