கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 33 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர்,
வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டல வலுவானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழக கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடலூரில் 6-ந் தேதி பிற்பகல் லேசான மழை துவங்கி இரவு 9 மணிக்கு மேல் 7-ந் தேதி (அதாவது நேற்று) காலை 5 மணி வரை அவ்வப்போது கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழையாகவும் பெய்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தேங்கியது. பின்னர் காலை வரை மழை பெய்யாமல் ஓய்ந்திருந்தது.
பரவலாக மழை
இதற்கிடையே காலை 10 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 15 நிமிடம் பெய்தது. அதன் பிறகு மாலை வரை மழை பெய்யாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 33 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக பெலாந்துரையில் 2 மில்லி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story