மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 7 March 2022 10:43 PM IST (Updated: 7 March 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் மருத்துவ முகாம் நடந்தது.

திட்டச்சேரி:
 திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் குத்துவிளக்கேற்றி தொடங்கி  வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மணிவேல், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுல்தான் ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் விநாயக வேலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், நாகை மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சாதிக் ஜபார், கோட்டூர் ஊராட்சி செயலாளர் சசிகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Next Story