வளவனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வளவனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வளவனூர்
வளவனூர் அருகே கோலியனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது 52). தொழிலாளியான இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் இவருக்கும் அவரது மனைவி ஜெயந்திக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதையடுத்து ஜெயந்தி கணவரை கோபித்துக்கொண்டு தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து தனது வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த அய்யனாரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story