திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு


திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 7 March 2022 10:48 PM IST (Updated: 7 March 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

திட்டச்சேரி:
திட்டச்சேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து சுகாதார நிலைய பெண் ஊழியர் காயம் அடைந்தார். இந்த சுகாதார நிலையத்தை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்ததார். இந்த நிலையில் திட்டச்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தமிழக அரசு  ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Next Story