குளித்தலை பகுதியில் சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகள்
குளித்தலை பகுதியில் சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
குளித்தலை,
சாலையோரத்தில் தீ
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை - தண்ணீர்பள்ளி செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் அருகில் சாலையோரம் வெட்டி குவிக்கப்பட்டிருந்த காய்ந்த செடி, கொடி, மரங்கள் போன்றவை நேற்று தீப்பிடித்து எரிந்தது. காற்று சற்று அதிகம் வீசியதால் இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அதில் இருந்து வெளியேறிய புகை சாலை மற்றும் சாலையோர குடியிருப்பு பகுதிகளில் காற்றில் கலந்த படி சென்றனர். இதனால் இப்பகுதியை கடக்கும்போது சாலைப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
கோரிக்கை
தற்செயலாக தீ பிடித்த அல்லது யாரேனும் செடிகொடிகளை தீவைத்து எரிக்க முயன்றனர் என்பது குறித்து தெரியவில்லை. இதுபோன்று கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு ஆங்காங்கே எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மற்றும் புகையுடன் தீப்பொறி பரவுவதால் இச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே சாலையோர இதுபோல் குப்பைகள் காய்ந்த மரம் செடிகள் எரிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story