புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காந்திகிராமம், புலியூர், ராமானுஜர் நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, புகையிலை பொருட்கள் விற்ற நம்பிராஜன் (வயது 55), பெரியசாமி (52), கனகராஜ் (35), முருகவேல் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story