முதல்அமைச்சர் முகஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் காந்தி வழங்கினார்
முதல்அமைச்சர் முகஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 21 குழந்தைகளுக்கு அமைச்சர் காந்தி தங்க மோதிரம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 21 குழந்தைகளுக்கு அமைச்சர் காந்தி தங்க மோதிரம் வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நகர தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை யொட்டி கடந்த 1-ந் தேதி பிறந்த 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவரும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான பரிதாநவாப் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் பாபு, காவேரிப்பட்டணம் தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ்.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி மற்றும் அணிகளின் நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி தலைவர் பதவியேற்பு
முன்னதாக கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், அமைச்சர் காந்தி முன்னிலையில் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதாநவாப் பதவி ஏற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், நகர செயலாளர் நவாப், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகர்மன்ற துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story