சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சீராக குடிநீர் வழங்க கோரி  காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 March 2022 11:19 PM IST (Updated: 7 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தூர்:
சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் உள்ள அருந்ததியர் நகர், சிவன் கோவில் தெரு, ராஜவீதி, மேல்வீதி ஆகிய பகுதிகளுக்கு 2 ஆயிரத்துக்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றுகூறப்படுகிறது.
இதனால் சீரான குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகினர்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் சீராக குடிநீர் வழங்க கோரி அந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் காலிக்குடங்களுடன் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி மற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலிக்‌குடங்களுடன் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story