இணையதளத்தில் பட்டதாரியிடம் நூதன முறையில் அபேஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ70 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார் உரியவரிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்


இணையதளத்தில் பட்டதாரியிடம் நூதன முறையில் அபேஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ70 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார் உரியவரிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
x
தினத்தந்தி 7 March 2022 11:20 PM IST (Updated: 7 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

இணையதளத்தில் பட்டதாரியிடம் நூதன முறையில் ரூ70 ஆயிரத்தை அபேஸ் செய்த நபரின் வங்கி கணக்கை முடக்கி போலீசார் பணத்தை மீட்டனர். அந்த தொகையை உரியவரிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி வழங்கினார்.

கிருஷ்ணகிரி:
இணையதளத்தில் பட்டதாரியிடம் நூதன முறையில் ரூ.70 ஆயிரத்தை அபேஸ் செய்த நபரின் வங்கி கணக்கை முடக்கி போலீசார் பணத்தை மீட்டனர். அந்த தொகையை உரியவரிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி வழங்கினார்.
ரூ.70 ஆயிரம் அபேஸ் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் தனேஸ்வர். பி.காம். சி.ஏ. பட்டதாரி. இவரை, மர்ம நபர் ஒருவர் டெலிகாம் மூலம் தொடர்பு கொண்டார். டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக அந்த நபர் கூறி தனேஸ்வரிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார். இதுகுறித்து தனேஸ்வர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து அந்த நபரின் வங்கி கணக்கை முடக்கி ரூ.70 ஆயிரத்தை மீட்டனர். அந்த பணத்தை பாதிக்கப்பட்ட தனேஸ்வரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் வழங்கினார். 
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறியதாவது:-
புகார் செய்யலாம் 
அறிமுகம் இல்லாத நபர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரங்கள், ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டால் கொடுக்க வேண்டாம். மேலும் அதற்கான லிங்க் எதுவும் வந்தால் அதை தொடாமல் தவிர்க்க வேண்டும். மேலும் போலியான ஆன்லைன் லோன் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரக்கூடிய வாட்ஸ் அப் வீடியோ கால்களை புறக்கணிக்க வேண்டும்.
கூகுளில் கிடைக்க கூடிய வாடிக்கையாளர் சேவை எண்களை பரிசீலிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டாம். தவறுதலாக வழிகளில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற டோல் பிரி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள முகவரியில் புகார் அளிக்கலாம். மேலும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story