தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் போலீஸ்காரர்கள் சந்திப்பு


தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் போலீஸ்காரர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 7 March 2022 11:20 PM IST (Updated: 7 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் போலீஸ்காரர்கள் சந்தித்து கொண்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கடந்த 1985-ம் ஆண்டு போலீஸ் துறையில் சேர்ந்தவர்கள் 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, உமா சங்கர், சக்கரபாண்டி, ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஒருவருக்கொருவர் தங்களது கடந்த கால மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இதில் பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சென்றாயன், நாகராஜன், சென்னியப்பன், ரவி, பூபதி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Next Story