ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 7 March 2022 11:28 PM IST (Updated: 7 March 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து பிரிந்து செல்லும் ராஜா வாய்க்கால் மூலம் நன்செய்இடையாறு வரை உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராஜா வாய்க்காலில் இருந்து கொமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் ஆகிய பகுதிகளுக்கு சிறு வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இவற்றின் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை, கரும்பு ஆகியவை பயன்பெறும். ராஜா வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தூர்வாரும் பணிக்காக கடந்த மாதம் 21-ந் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து, ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நன்செய்இடையாறு விவசாயிகள் சங்க தலைவர் மாயாண்டி, செயலாளர் ரவி, பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி, துணைத்தலைவர் குப்புதுரை, பொத்தனூர் விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்நாதன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story