மோகனூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
மோகனூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மோகனூர்:
மோகனூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி மோகனூர், பாலப்பட்டி அணியாபுரம், வளையப்பட்டி ஆகிய குறுவள மையங்களில் நடக்கிறது. நேற்று தொடங்கிய பயிற்சியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009, பள்ளி மேலாண்மைக்குழுவை மேலாண்மை செய்வதற்கும் வலியுறுத்தப்பட்டது. மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார், துணைத்தலைவர் சரவணகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியை குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பாலுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர் ஆசிரியர்கள் சங்கர் குமார், முருகேசன், ஆசிரியர் பயிற்றுனர்கள் தமிழரசி, ராதிகா, விஜயா மற்றும் பிரேமலதா, இல்லம் தேடி கல்வி மையத்திற்கான வட்டார பொறுப்பாசிரியர் சத்தியமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story