திருச்செங்கோட்டில் மண்டல கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் சேலம் அணி சாம்பியன்-கோவை பெண்கள் அணி முதலிடம்


திருச்செங்கோட்டில் மண்டல கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் சேலம் அணி சாம்பியன்-கோவை பெண்கள் அணி முதலிடம்
x
தினத்தந்தி 7 March 2022 11:29 PM IST (Updated: 7 March 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் நடந்த மண்டல கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

எலச்சிப்பாளையம்:
கோவை மண்டல அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் 3 நாட்கள் நடந்தது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சேலம் அணியும், ஈரோடு அணியும் மோதின. இதில் 65-க்கு 49 என்ற புள்ளி கணக்கில் சேலம் அணி ஈரோடு அணியை வீழ்த்தி முதல் பரிசை வென்றது. ஈரோடு அணி 2-வது இடத்தையும், நாமக்கல் அணி 3-வது இடத்தையும், கோவை அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் கோவை, ஈரோடு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடின. இதில் கோவை அணி 76-க்கு 34 என்ற புள்ளி கணக்கில் ஈரோடு அணியை வீழ்த்தியது. ஈரோடு அணி 2-வது இடத்தையும், சேலம் அணி 3-வது இடத்தையும், நாமக்கல் அணி 4-வது இடத்தையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன. மேலும் சிறந்த வீரராக சேலம் கிஷோரும், வீராங்கனையாக கோவை லட்சுமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. சான்றிதழ்கள், கோப்பையை வழங்கினார். இதில் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், துணை தலைவர் பரந்தாமன், செயலாளர் முரளி, பி.ஆர்.டி. நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு நகராட்சி துணை தலைவர் தாண்டவன் கார்த்திகேயன், எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் பிரபு, செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு துறை இயக்குனர் அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story