நகை கொடுக்கல் வாங்கலில் தகராறு பெண் மீது தாக்குதல்
நகை கொடுக்கல் வாங்கலில் தகராறு பெண் மீது தாக்குதல்
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை பட்டறைக்குளம் வடக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மனைவி பெரமாயி(வயது35). இவருக்கும் செல்வராஜ் மனைவி நாடியம்மாள் என்பவருக்கும் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் பெரமாயி தான் கொடுத்த நகையை திருப்பி தருமாறு நாடியம்மாளிடம் கேட்டார். அப்போது அவர்கள் இருவர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாடியம்மாளின் மகன் சின்னத்தம்பி (28) கட்டையால் பெரமாயியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெரமாயி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி முத்துப்பேட்டை பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story