குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை
திருப்புவனத்தில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி யை வெட்டிக்கொலை செய்ததாக மனைவி-மகன் கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புலியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவருடைய மனைவி பாண்டியம்மாள் (54). மகன் முத்து (36). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ராஜேந்திரன் மது குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்வாராம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் வழக்கம்போல் தகராறு செய்துள்ளார். இதை மகன் முத்து கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து, தந்தையை அரிவாளால் வெட்டினார். மேலும் பாண்டியம்மாளும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரனின் சகோதரி சின்னவீரம்மாள் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீசார் ராேஜந்திரன் உடலை பிரதே பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முத்து, பாண்டியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story