உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்காடு மாணவர் கோரிக்கை
உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாயகம் திரும்பிய ஆற்காடு மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆற்காடு
உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாயகம் திரும்பிய ஆற்காடு மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆற்காடு மாணவர்
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரின் காரணமாக அந்தநாட்டில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆற்காடு புதுத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் அருணாச்சலம் உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வந்தார். அந்தநாட்டில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக நேற்று முன்தினம் இரவு அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
மாணவர் அருணாச்சலம் கூறியதாவது:-
இந்தியாவில் படிக்க...
உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக இந்திய மாணவர்கள் பலர் கார்கிவ் நகரில் இருந்து லிவிங் நாட்டிற்கு ெரயில் மூலம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் எங்களை தாயகம் அழைத்து வந்தனர். கார்கிவ் நகரில் இருந்து ெரயிலில் வரும்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. பலநேரங்களில் வெடி சத்தம் கேட்கும் போது விளக்கை அணைத்து ெரயிலை நிறுத்தி விடுவார்கள். வெடி சத்தம் கேட்கும் போது பயமாக இருக்கும் இதனால் ெரயிலில் வரும் பயணிகள் பீதி அடையாமல் இருக்க பாடல்களை ஒலிக்கச் செய்தனர்.
மற்ற நாட்டவர்களை விட இந்திய அரசு நமது நாட்டு மக்களை அழைத்து வருவதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் மாநில அரசும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அந்நாட்டில் மருத்துவம் படித்து வந்த நாங்கள் மீண்டும் அங்கு சென்று படிப்போமா என்று தெரியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் நாங்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோளிங்கர் மாணவர்
சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஹேம குமார் உக்ரைனில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நாடு திரும்பிய அவர் கூறியதாவது:-
போர் காரணமாக நாங்கள் பதுங்கு குழியில் பதுங்கி இருந்து எப்போது என்ன நடக்குமோ என்று தெரியாமல் உயிரை பாதுகாத்துக் கொண்டு இருந்தோம். அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் நாங்கள் அச்சத்தில் இருந்தோம். கிடைத்த உணவுகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தோம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலமாக தாயகம்திரும்பி உள்ளோம்.
கடுமையான போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் மருத்துவ மாணவர்களின் உயிரின் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுத்ததற்கு மத்திய,மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் மீட்டு வரப்பட்டுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story