கீரை.தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கீரை.தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரை.தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை.தமிழ்ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் பீட்டர் முன்னிலை வகித்தார். விழாவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் 41 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் பாராமல் பாடுபட்டு கொரோனாவை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவும், தடுக்கவும், சோர்வடையாமல் சேவை செய்தவர்கள், உயிர் காக்கும் மருத்துவ சேவையில் சிகிச்சையில் இன்றியமையாத பணியை மேற்கொள்பவர்கள் செவிலியர்கள் தான் என்று கூறினார். முன்னதாக கல்லூரி முதல்வர் நிர்மலா வரவேற்றார்.
Related Tags :
Next Story