அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா


அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா
x
தினத்தந்தி 8 March 2022 12:07 AM IST (Updated: 8 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அய்யனார் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக அய்யனார் கோவிலுக்கு குதிரை எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. அதாவது கோவில் காப்புக்கட்டியதுடன் செரியலூரில் உள்ள மண்பாண்டக் கலைஞர்களிடம் அய்யனார் கோவிலுக்கு களிமண் குதிரை, காளை, சுவாமி சிலைகள், பரிவார தெய்வங்கள் என சிலைகள் செய்ய பாக்கு வைத்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஏராளமானோர் தாரை தப்பட்டைகளுடன் செரியலூர் வந்து அங்கு குதிரை மற்றும் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகு பெரிய குதிரை, காளை சிலைகளை சரக்கு வாகனங்களிலும், மற்ற சுவாமி சிலைகளை தலையிலும் தூக்கிச் சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு தூக்கி சென்று அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

Next Story