கடலில் பலத்தகாற்று வீசியதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை மணமேல்குடி மீன்மார்க்கெட் வெறிச்சோடியது


கடலில் பலத்தகாற்று வீசியதால்  நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை மணமேல்குடி மீன்மார்க்கெட் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 8 March 2022 12:08 AM IST (Updated: 8 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மணமேல்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த பொன்னகரம், வடக்கு அம்மாப்பட்டிணம், அந்தோணியார்புரம் ஆகிய பகுதி மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கடலில் பலத்தகாற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மீன்வாங்க வந்த வாடிக்கையாளர்கள் சிலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story