லோக் அதாலத் 12-ந் தேதி நடக்கிறது
பெரம்பலூரில், லோக் அதாலத் 12-ந் தேதி நடக்கிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் அறிவுரையின்படி, செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது
பெரம்பலூரில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) வருகிற 12-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி வழக்கு, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றுக்கு சமரச தீர்வு காணப்படும். வழக்குகளில் சமரசம் ஏற்படும் பட்சத்தில் செலுத்தியுள்ள நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வழக்கில் சமரசமான அன்றைய தினமே தீர்ப்பின் நகலை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி-தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள்-வக்கீல்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக தினந்தோறும் சமரச பேச்சுவார்த்தை பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது. விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story