ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் வருகிற 12-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது


ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் வருகிற 12-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
x
தினத்தந்தி 8 March 2022 12:34 AM IST (Updated: 8 March 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் வருகிற 12-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் வருகிற 12-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 10 ஆயிரம் பேர்பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு பயிற்சித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஜி.கே. உலகப் பள்ளி ஆகியவை இணைந்து வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜி.கே. உலகப் பள்ளியில் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் பொறியியல் மற்றும் பட்டப்படிப்புகள் வரை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக இந்த முகாம் நடைபெற உள்ளது. 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. சுமார் 10 ஆயிரம் பேர் பங்கு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கும், வேலை வேண்டி விண்ணப்பித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

முகாமில் வேலை நாடுபவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுபவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

உறுதிப்படுத்த வேண்டும்

முகாமில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏதுவாக குழு அமைத்தல் மற்றும் முகாம் வளாகத்தை ஆய்வுசெய்து மின்சார ஆபத்து தொடர்பாக சோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அம்மூர் பேரூராட்சி மற்றும் ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகத்தினர் வேலை வாய்ப்பு முகாமிற்கு முன்பும் பின்பும் கல்லூரி வளாகத்தை தூய்மைப் படுத்துதல் மற்றும் வேலை நாடுனர்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். வேலை நாடுபவர்கள் முகாமிற்கு வருவதற்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் கவிதா, ஜி.கே.பள்ளி இயக்குனர் வினோத் காந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story