பள்ளி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான 3 ஆண்டு நிலுைவ தொகையை வழங்க ேவண்டும்


பள்ளி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான 3 ஆண்டு நிலுைவ தொகையை வழங்க ேவண்டும்
x
தினத்தந்தி 8 March 2022 12:34 AM IST (Updated: 8 March 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான 3 ஆண்டு நிலுைவ தொகையை வழங்க ேவண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை.

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை, எனக் கூறப்படுகிறது. 

தங்களுக்கு மாத ஊதியமாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 36 மாதங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் தங்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருவதாக ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய பட்டியல் தயாரித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படும், எனத் தெரிவித்தார். 

எனவே கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை வைக்கப்படுகிறது.

Next Story