பெரம்பலூர் போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி.பாராட்டு
பெரம்பலூர் போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த சுமதியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறியுள்ளார். பின்னர், சுமதியிடம் பணம் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். இந்தநிலையில், பெண்ணிடம் மோசடி செய்ததாக டெல்லியை சேர்ந்த சுனில்குமார் என்பவரை காரைக்குடியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில், திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீசாரை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Related Tags :
Next Story