ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு


ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 7 March 2022 7:20 PM GMT (Updated: 2022-03-08T00:50:07+05:30)

ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு

ஸ்ரீரங்கம், மார்ச்.8-
ஸ்ரீரங்கம் மேலூர் செட்டி தோப்பு, பண்ணை தோப்பையொட்டிஉள்ள காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு கிணறு அமைத்தால் ஸ்ரீரங்கம் பகுதியில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும், கால்நடைகள் பாதிக்கப்படும் என்றும் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம் சார்பில் நாளை (புதன்கிழமை) ஸ்ரீரங்கம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கடிதத்தில், அரசின் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பு முறைப்படி மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது நீதிமன்றத்திடமோ முறையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் அங்கு உண்ணாவிரதம் இருந்தால் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story