உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ- மாணவி
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ- மாணவியை அமைச்சர் காந்தி வரவேற்றார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் பூஜா குணசேகர் மற்றும் வடகால் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் சுபாஷ் சந்திரன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்று வருவதால், இவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தியிடம், மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மாணவர்களுடன் அமைச்சர் ஆர்.காந்தி போனில் பேசினார். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சருக்கும் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, அமைச்சர் காந்தியின் முயற்சியால் இம்மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினார்கள்.
சொந்த ஊர் திரும்பிய மாணவி பூஜா குணசேகர் மற்றும் மாணவன் சுபாஷ் சந்திரன் ஆகியோரை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார். தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தியும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story