பேரூராட்சி அலுவலகம் முன்புa ரியல் எஸ்டேட் அதிபர் தர்ணா போராட்டம்


பேரூராட்சி அலுவலகம் முன்புa ரியல் எஸ்டேட் அதிபர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 1:10 AM IST (Updated: 8 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ரியல் எஸ்டேட் அதிபர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அஹமத். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் உதயேந்திரம் பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் வீட்டுமனை பிரிவு போட்டுள்ளார். இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு வீட்டுமனை விற்பனை செய்ய உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

 பேரூராட்சி செயல் அலுவலர் மனை பிரிவு நிபந்தனை குறித்து தகவல் ஏதும் கொடுக்காமல், விதிகளை வாய்வழியாக கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஷகீல் அஹமத் வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில் சாலை அமைத்தல், மின்சார கம்பங்களுக்கு மின் வாரியத்தில் பணம் செலுத்திவிட்டு, நேற்று செயல் அலுவலரை பார்க்க வந்த போது அவர் அலுவலகத்தில் இல்லாததால், அலுவலகத்தில் விசாரித்த போது, வீட்டு மனை அமைய உள்ள இடத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். அப்போதுதான் பேரூராட்சி ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். இதனால் ஷகீல் அஹமத் கடந்த 3 வருடங்களாக ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பேரூராட்சி அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த செயல் அலுவலர் குருசாமி வீட்டுமனை பிரிவுக்குத் தேவையான விதிகள் குறித்த விவரங்களை வழங்கினார். அதன் பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story