உக்ரைனில் இருந்து ஆண்டிமடம் திரும்பிய மருத்துவ மாணவர்
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த ஆண்டிமடம் மாணவர் சொந்த ஊர் திரும்பினார்.
ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மகன் பாலபாரதி (வயது 22). இவர், உக்ரைன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்தார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.
இதனால், உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாயகம் திரும்பிய வண்ணம் உள்ளனர். அந்தவகையில் உக்ரைனில் இருந்து நேற்று அதிகாலை மாணவர் பாலபாரதி நேற்று சொந்த ஊர் திரும்பினார்.
கல்வி தொடர உதவ வேண்டும்
இதுகுறித்து அவர் கூறுகையில், போர் நடைபெற்ற இடத்திற்கும், தான் தங்கியிருந்த இடத்திற்கு அதிக தூரம் இருந்ததால் போரின் உக்கிரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. ஆனால், போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவித்த சக மாணவர்கள் தெரிவித்தபோது மிகவும் அச்சமாக இருந்தது.
போர் முடிவுக்கு வந்து மீண்டும் உக்ரைன் சென்று மருத்துவ கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மத்திய, மாநில அரசுகள் எங்கள் கல்வியை தொடர்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.சொந்த கிராமத்திற்கு வந்த மாணவர் பாலபாரதியை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவின்பேரில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் நேரில் சென்று வரவேற்றார்.
Related Tags :
Next Story