தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்


தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 8 March 2022 1:42 AM IST (Updated: 8 March 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

திருச்சி, மார்ச்.8-
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
இந்த குறை தீர்க்கும் முகாமில் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. தங்கள் குறைகளை ''அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்- மார்ச் 2022'' ராஜகோபாலன் உதவி இயக்குனர் (காப்பீடு மற்றும் புகார்) அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம் மத்திய மண்டலம் திருச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த புகார்கள் அனுப்பு வருகிற 31-ந்தேதி கடைசி நாளாகும். மேற்கண்ட தகவலை மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story