கார் மோதி வாலிபர் சாவு
கார் மோதி வாலிபர் சாவு
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லமடை ஊராட்சி செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திக் (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஆர்.எஸ். மங்கலம் வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story