இளையான்குடி அருகே மஞ்சுவிரட்டு


இளையான்குடி அருகே மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 8 March 2022 2:16 AM IST (Updated: 8 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கலுங்கு ஸ்ரீமுனீஸ்வரர் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இளையான்குடி,
 
இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கலுங்கு ஸ்ரீமுனீஸ்வரர் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் சாலைக்கிராமம், பாகனேரி, திருச்சி, கோசக்குறிச்சி, மரப்பட்டை, கோவில்பட்டி, கண்டாணிப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து காளைகளும், சிவகங்கை சென்நகரம்பட்டி, கீரணிப்பட்டி, அரசூர், கருப்பாயூரணி, பள்ளப்பட்டி, திருவாடானை, காளையார்கோவில், மணியங்குடி, பொட்டல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியை அய்யம்பட்டி, வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம், வலசைககாடு, சாலைக்கிராமம், துகவூர், பரத்தவயல், கரும்புக் கூட்டம் ஆகிய கிராம மக்கள் கண்டுகளித்தனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்காத காளைகளை வளர்த்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story